Map Graph

கிழக்கு தாம்பரம்

தாம்பரத்தில் உள்ள அக்கம், தமிழ்நாடு, இந்தியா

கிழக்கு தாம்பரம் சென்னைக்கு அருகமைந்த செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் அமைந்த தாம்பரம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கு தாம்பரத்தில் மாதம்பாக்கம் செம்பாக்கம் மற்றும் சேலையூர் பகுதிகள் உள்ளது. கிழக்கு தாம்பரத்தில் தாம்பரம் தொடருந்து நிலையம் மற்றும் சென்னை கிறித்துவக் கல்லூரி செயல்படுகிறது. இப்பகுதியில் கம்பர் தெரு, வியாசர் தெரு, பரத்துவாஜர் தெரு, காளமேகம் தெரு, மணிமேகலை தெரு, திருவள்ளுவர் தெரு, நம்மாழ்வார் தெரு, குலசேகர ஆழ்வார் தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு, பெரியாழ்வார் தெரு மற்றும் ஆண்டாள் தெரு உள்ளது.

Read article